Enter your Email Address to subscribe to our newsletters

சபரிமலை, 16 நவம்பர் (ஹி.ச.)
சத்திரம் வனப் பகுதியில் பக்தர்களை வரவேற்று வைக்கப்பட்டுள்ள அலங்கார நுழைவாயில்.
பக்தர்களுக்கான வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்.
சபரிமலை ஐயப்பன்
கோயிலில் டிச. 27-ம் தேதி மண்டல பூஜை
நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட உள்ளது.
ஆன்லைன் மூலம் 70 ஆயிரம் பக்தர்களும், ஸ்பாட் புக்கிங் மூலம் 20 ஆயிரம் பேரும் தினமும் தரிசனத்துக்கு வர உள்ளனர். இதையொட்டி, பக்தர்கள் வசதிக்காக பல்வேறு
ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரிகள் கூறியதாவது:
பம்பையில் புதிதாக 10 கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 10 ஆயிரம் பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்கலாம். பம்பை ஹில்டாப், சக்கு பாலத்தில் சிறிய வாகனங்களுக்கான நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது.
பம்பையில் இருந்து சந்நிதானம் வரை 56 இடங்களில் பக்தர்களுக்கு சுக்கு நீர்
விநியோகிக்கப்படும்.
மொத்தம் 41 நாட்கள் மண்டல கால வழிபாடுகள் நடைபெறும்.
தரிசன வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு பிஸ்கெட், மூலிகை குடிநீர் வழங்கவும், அன்னதானத்துக்கும்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாதயாத்திரை பக்தர்களின் உடல்வலி உபாதையை
சரி செய்ய 24 மணி நேர
பிசியோதெரபி
மையங்களும்
அமைக்கப்பட்டுள்ளன.
அனைத்து ஏற்பாடுகளும் முழுமை அடைந்துள்ளன.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / Durai.J