Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 16 நவம்பர் (ஹி.ச.)
கரூர், திருவள்ளூர் விளையாட்டு மைதானத்தில் கரூர் மாவட்ட திமுக சார்பில் மாநில இளைஞரணி செயலாளர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 49 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கரூர் மாவட்ட அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சிலம்பம் போட்டியை கரூர் மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.
முதல் நாள் போட்டிகளில், பெண்களுக்கான போட்டியை சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார். இந்தப் போட்டியில் 14 முதல் 19 வயது வரை பெண்கள் கலந்து கொண்டனர் மற்றும் பொது பிரிவு, வயது வரம்பு கிடையாது பெண்களும் கலந்து கொண்டனர்.
இந்தப் போட்டியில் முதல் பரிசு 25 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசு ரூ.20 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.15 ஆயிரம் என மொத்தம் 7 லட்சத்து 20 ஆயிரம் பெண்களுக்கான பரிசுத் தொகையை வழங்க உள்ளனர்.
கரூர் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொண்டனர். முதல் சுற்று நாக் அவுட் முறையில் வெற்றி பெற்றவர்களுக்கு பிக்சர்ஸ் போடப்பட்டு தொடர்ந்து போட்டிகள் நடைபெறும் என்று தெரிவித்தனர்.
போட்டியை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி கூறியதாவது:
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இந்து அறநிலை துறைக்கு சார்ந்த இடங்கள் கையகப்படுத்தப்படவில்லை.ஆனால், கரூர் மாவட்டத்தில் முக்கியமாக கரூர் சட்டமன்ற தொகுதியை மட்டும் குறிவைத்து சேலத்தை சார்ந்த திருத்தொண்டர் அறக்கட்டளை ராதாகிருஷ்ணன் அவர்களை வைத்து அதிமுக நிர்வாகிகளை வைத்து செயல்பட்டு வருகிறார்கள்.
2018 - 19 அதிமுக ஆட்சிக்காலத்தில் பல்வேறு அரசு அலுவலர்களின் குளறுப்படிகளால் இந்த சட்ட பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 441 ஓட்டு வித்தியாசத்தில் வென்றவர் 420 ஆக வேலை செய்கிறார். இவரால்தான், வெண்ணமலையில் இனாம் நிலம் பிரச்சினை ஏற்பட்டது.
அதிமுக ஆட்சி காலத்தில் இருந்த குளறுபடி ஒன்றும் தெரியாதவர்கள்போல், அதிமுக சார்ந்தவர்கள் மக்களுக்கு நல்லது செய்கிறேன் என்று மீண்டும் தெரிவித்து வருகின்றனர்.
வெண்ணமலை பிரச்னை தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு குழு அமைத்து இதற்கான தீர்வை கூடிய விரைவில் தீர்வு காணப்படும். 2026-லும் தி.மு.க தலைமையிலான கூட்டணிதான் மகத்தான வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN