தெரு நாய்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரியும், நீதிமன்ற உத்தரவை கண்டித்தும் விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் நாய் பிரியர்கள் அமைதி பேரணி
சென்னை, 16 நவம்பர் (ஹி.ச) தெருநாய்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரியும், நீதிமன்ற உத்தரவை கண்டித்தும் விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் நாய் பிரியர்கள் அமைதி பேரணியை நடத்தினர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இருந்து தெரு நாய்களை அகற்ற வேண்டும் என உச
Dog


சென்னை, 16 நவம்பர் (ஹி.ச)

தெருநாய்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரியும், நீதிமன்ற உத்தரவை கண்டித்தும் விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் நாய் பிரியர்கள் அமைதி பேரணியை நடத்தினர்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இருந்து தெரு நாய்களை அகற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவை கண்டிக்கும் வகையிலும், தெரு நாய்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரியும் சுமார் 100க்கும் மேற்பட்ட விலங்கியல் ஆர்வலர்கள் மற்றும் நாய் பிரியர்கள் சிந்தாதிரிப்பேட்டை சந்திப்பில் துவங்கி எழும்பூர் வரை அமைதி பேரணியை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விலங்கு நல ஆர்வலர் பிரியா,

பொது இடங்களில் உள்ள தெருநாய்களை அகற்றப்பட வேண்டும் என உச்ச நீதிமன்ற உத்தரவை கண்டிக்கும் வகையில் இந்த அமைதி பேரணி நடைபெற்று வருவதாகவும், ஏற்கனவே பல்வேறு உத்தரவுகள் இருப்பதாகவும் குறிப்பாக தெரு நாய்களை கருத்தடைகள் செய்து அதே இடத்தில் விட வேண்டும் எனவும் தெரு நாய்களுக்கு உணவளிக்கலாம் எனவும் தெரு நாய்களை தாக்கினால் உடனடியாக வழக்குபதிவு செய்ய வேண்டும் என பல்வேறு உத்தரவுகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தெரு நாய்களை வேறு இடத்தில் விட்டால் அங்குள்ள நாய்களுடன் சண்டை ஏற்படும் எனவும் சோறு இல்லாததாலும் பயத்தின் காரணமாக மற்றவர்களை கடிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும் எனவும் நாய்களை வாழ விடுங்கள், நாய்கள் அனைவருக்கும் நண்பர்கள் எனவும் நாய்கள் இல்லையென்றால் குற்றங்கள் கொலைகள் நடக்கும் என்றனர்.

Hindusthan Samachar / P YUVARAJ