ஸ்ரீசத்ய சாய் பாபா நூற்றாண்டு விழாவையொட்டி பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம்
பெங்களூரு, 16 நவம்பர் (ஹி.ச.) ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் ஸ்ரீசத்ய சாய் பாபா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்க தென்மேற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தென்மேற்கு ரெயில்வே வெள
ஸ்ரீசத்ய சாய் பாபா நூற்றாண்டு விழாவை பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கம்


பெங்களூரு, 16 நவம்பர் (ஹி.ச.)

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் ஸ்ரீசத்ய சாய் பாபா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்க தென்மேற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பெங்களூரு கன்டோன்மென்ட்-திருவனந்தபுரம் வடக்கு சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06543) நவ 15 ஆம் தேதி மதியம் 1 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு இன்று (நவ 16) காலை 6.40 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடையும்.

மறுமார்க்கமாக திருவனந்தபுரம் வடக்கு-பெங்களூரு கன்டோன்மென்ட் சிறப்பு ரெயில் (06544) இன்று

(நவ 16) காலை 9.30 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு பெங்களூருவை வந்தடையும்.

இதேபோல், பெங்களூரு கன்டோன்மென்ட்-திருவனந்தபுரம் வடக்கு சிறப்பு ரெயில் (06549) வருகிற 22-ந்தேதி மதியம் 3 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 6.40 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடையும். மறுமார்க்கமாக திருவனந்தபுரம் வடக்கு-பெங்களூரு கன்டோன்மென்ட் சிறப்பு ரெயில் (06550) வருகிற 23-ந்தேதி காலை 9.30 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு பெங்களூருவை வந்தடையும்.

இந்த ரெயில்கள் இருமார்க்கமாகவும் கே.ஆர்.புரம், பங்காருபேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், ஆல்வா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், சங்கனாச்சேரி, செங்கனூர், காயன்குளம், கொல்லம், வர்க்கலா, ஷிவகிரி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b