Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 16 நவம்பர் (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம், புனித மரியன்னை முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் மாநில அளவிலான கால்பந்து போட்டி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது.
இதில் மாநில முழுவதும் இருந்து 12 மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் 12 அணிகள் கலந்து கொண்டன.
இதன் இறுதி போட்டியில், மதுரை அமெரிக்கன் கல்லூரி மேல்நிலைப்பள்ளி அணி, கோயம்புத்தூர் பயணியர் மில்ஸ் மேல்நிலைப்பள்ளி அணியை 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. மூன்றாம் இடத்தை திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி அணியும், நான்காம் இடத்தை சேலம் கிலேசி புரூக் அகடாமி அணியும் பிடித்தது.
தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு, மாவட்ட கால்பந்து கழக தலைவர் சுந்தர்ராஜன் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் சண்முகம், துணைத் தலைவர் ரமேஷ் பட்டேல், பள்ளி அதிபர் மரிவளன், பள்ளி தாளாளர் மரியநாதன், தலைமை ஆசிரியர் ஸ்டீபன் லூர்து பிரகாசம் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கெரி இண்டேவ் விளையாட்டு தூதுவர்கள் சுகுமார், செல்வராஜ், ஷாலினி கோப்பையை வழங்கினர். நிகழ்ச்சியில், முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் ஜேம்ஸ், மரிய ராஜேந்திரன், லாரன்ஸ், பிரேம் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / Durai.J