பாஜக அரசின் வஞ்சகத்தை துணிச்சலுடன் வெளிப்படுத்தும் பத்திரிகையாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
சென்னை, 16 நவம்பர் (ஹி.ச.) தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (நவ 16) பத்திரிகையாளர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, எந்தவொரு ஜனநாயகத்திலு
பாஜக அரசின் வஞ்சகத்தை துணிச்சலுடன் வெளிப்படுத்தும் பத்திரிகையாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு


சென்னை, 16 நவம்பர் (ஹி.ச.)

தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (நவ 16)

பத்திரிகையாளர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது,

எந்தவொரு ஜனநாயகத்திலும், அதிகாரத்தில் இருப்பவர்களால் நிறுவனங்கள் வளைக்கப்படலாம் அல்லது கைப்பற்றப்படலாம், ஆனால் பத்திரிகைகள் ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் சக்தியாக இருக்க வேண்டும்.

தேசிய பத்திரிகை தினத்தன்று, மத்திய பாஜக அரசின் சர்வாதிகாரத்திற்கு அடிபணிய மறுத்து, அதன் தோல்விகள், அதன் ஊழல் செயல்கள் மற்றும் அதன் வஞ்சகத்தை துணிச்சலுடன் வெளிப்படுத்தும் ஒவ்வொரு பத்திரிகையாளரையும் நான் பாராட்டுகிறேன்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b