Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 நவம்பர் (ஹி.ச.)
தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு தரப்பில் ஓய்வுபெற்ற நீதிபதி ஏகே ராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
அந்த குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் சட்டசபையில் 13.9.2021ல் தமிழ்நாடு மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை சட்டம் 2021 என்ற சட்ட முன்முடிவு நிறைவேற்றப்பட்டது.
அதன்பின் ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால், மீண்டும் சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் மூலமாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. அதன்பின் மத்திய அமைச்சகங்கள் தரப்பில் கோரப்பட்ட விளக்கங்களும் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆனால் நீட் விலக்கு மசோதாவை ஏற்க மத்திய அரசு மறுத்தது.
இந்நிலையில், குடியரசுத் தலைவர் நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழ்நாடு இளங்கலை மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை மசோதா, 2021 ஒப்புதல் அளிக்க மறுத்துள்ள குடியரசுத் தலைவரின் முடிவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மசோதா மீது முடிவெடுக்க 1400 நாட்களுக்கு மேல் குடியரசுத் தலைவர் தாமதம் செய்து இருக்கிறார், மேலும் மசோதாவை நிராகரிப்பதற்கான காரணத்தையும் கூறவில்லை என தமிழ்நாடு அரசு மனுவில் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b