Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 16 நவம்பர் (ஹி.ச.)
கோவையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி களைகட்டியது.
இதில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பாடல்களுக்கு ஏற்றவாறு உற்சாக நடனம் ஆடி மகிழ்ந்தனர்.
தொழில் நகரமான கோவையில் காலை எழுவது முதல் இரவு படுக்கைக்குச் செல்வது வரை பணி சுமையில் சிக்கித் தவிக்கும் அலுவலர்கள் முதல் பொதுமக்கள் வரை இப்போது எந்திர மயமான வாழ்க்கைத்தரத்தில் இருந்து மெல்ல வெளியேறி காரணமாக அமைந்து உள்ளது 'மகிழ்ச்சி வீதி விழா'. என்ற 'ஹேப்பி ஸ்ட்ரீட்'
வார இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும் இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி இன்று கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் நடைபெற்றது.
இதில் சினிமா பாடல்கள் மட்டும் இல்லாமல், நம் பாரம்பரிய நடனம், பாட்டும் பங்கேற்ற பலர் பாடி உற்சாகம் பெற்றனர்.
அந்த சாலையில், விளையாட்டுக்கள் மட்டுமின்றி தற்காப்பு கலைகளான கராத்தே போன்ற உடற்பயிற்சிகளும் அளிக்கப்பட்டதுடன், மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / V.srini Vasan