Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 16 நவம்பர் (ஹி.ச.)
கோவை காந்திபுரத்தில் உள்ள மத்திய சிறைச்சாலை மைதானத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு வரும் செம்மொழி பூங்கா பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் பார்வையிட்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்,நேரு,
செம்மொழி பூங்கா பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், இந்த மாத இறுதிக்குள் முதல்வர் திறந்து வைப்பார். பூங்காவில் 23 செயல்பாடுகளில் நான்கு மட்டும் மீதமுள்ளதாகவும், ஒரு வாரத்தில் பணிகள் முழுமையாக முடியும்.
பூங்கா பணிக்காக ரூ.214.25 கோடி செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் விளக்கினார். மரங்கள் நடவு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்த அவர், அரிதான மரங்கள், ஆயிரம் வகை ரோஜா, உலகில் இல்லாத தாவர வகைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
துப்புரவு பணியாளர்கள் நிரந்தரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, முதல்வர் அறிவித்த ஆறு நலத்திட்டங்களின் பயன்களைப் பற்றி அமைச்சர் குறிப்பிட்டார். பீகார் தேர்தல் வெற்றி தமிழகத்தில் தாக்கம் ஏற்படுத்தும் என்ற பாஜக கூற்றை பற்றி, “தேர்தலில் ஜெயிப்பது நாங்கள்தான் என அவர் மறுத்தார்.
வாக்காளர் பட்டியல் குறித்த தவெக தலைவர் விஜய் கருத்துக்கு பதிலளித்த அமைச்சர், “68,000 பேர் பணிபுரிகின்றனர்; குளறுபடிகள் இல்லை” என்றார். சின்னவேடம்பட்டி ஏரி பிரச்சினை, தண்ணீர் விநியோகம், குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம், SIR படிவ குற்றச்சாட்டு போன்ற விடயங்களுக்கும் அவர் விளக்கம் அளித்தார்.
திருப்பதி நன்கொடை தொடர்பாக, “என் குடும்ப உறவினர்கள் வழங்கியதாக தெரிந்தது; எனக்குத் தெரிந்திருந்தால் வேண்டாம் எனச் சொல்வேன்” என்று அமைச்சர் கூறினார்.
Hindusthan Samachar / V.srini Vasan