தேசிய பத்திரிகை தினம் - டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் வாழ்த்து
சென்னை, 16 நவம்பர் (ஹி.ச.) தேசிய பத்திரிக்கை தினத்தையொட்டி அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, ஜனநாயகத்தின் நான்காம் தூணாக போற்றப்படும் பத்திரி
Ttv


Tweet


சென்னை, 16 நவம்பர் (ஹி.ச.)

தேசிய பத்திரிக்கை தினத்தையொட்டி அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

ஜனநாயகத்தின் நான்காம் தூணாக போற்றப்படும் பத்திரிகை மற்றும் ஊடகத்துறையினருக்கு எனது மனமார்ந்த தேசிய பத்திரிகை தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

உண்மை மற்றும் நடுநிலைத்தன்மையை அடிப்படையாக கொண்டு ஜனநாயகத்தை கட்டிக்காப்பதில் பெரும்பங்கு ஆற்றிக் கொண்டிருக்கும் பத்திரிகை மற்றும் ஊடகத்துறையினரின் அரும்பெரும் பணிகள் மென்மேலும் சிறக்க மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.

என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ