Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 நவம்பர் (ஹி.ச.)
சபரிமலை சீசன் மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு 30 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சபரிமலை சீசன் மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு 30 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் டிசம்பர் 15-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை மேல்மருவத்தூரில் நின்று செல்லும்.
அதன்படி, லோக்மானியா திலக் - காரைக்கால் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் - மதுரை வைகை சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் - மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி - நிஜாமுதின் திருக்குறள் எக்ஸ்பிரஸ், மதுரை - நிஜாமுதின் சம்பார்க் கிராந்தி எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் - திருச்சி ராக்போர்ட்
எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் - செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர்-நாகர்கோவில் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் - கொல்லம் எக்ஸ்பிரஸ், தாம்பரம் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், காரைக்கால் - தாம்பரம் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் - மன்னார்குடி எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி - பனாரஸ் காசி தமிழ் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் உழவன் எக்ஸ்பிரஸ், ஜோத்பூர் - திருச்சி ஹம்சபார் எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் - பெரோஸ்பூர் ஹம்சபார் எக்ஸ்பிரஸ்,
நாகர் கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ், புவனேஸ்வர் - ராமேஸ்வரம் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், புவனேஸ்வர் - புதுச்சேரி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், லோக்மானியா திலக் - மதுரை எக்ஸ்பிரஸ், புதுச்சேரி - புதுடெல்லி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் - பனாரஸ் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் - அயோத்தியா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் - மதுரை சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், மதுரை - பிக்கானெர் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், தாம்பரம் - நாகர்கோவில் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஜோத்பூர் - மன்னார்குடி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் - சேலம் எக்ஸ்பிரஸ் ஆகியவை இருமார்க்கமாக செல்லும்போதும் ஒரு நிமிடம் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b