Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 17 நவம்பர் (ஹி.ச.)
சவுதி அரேபியாவில் இன்று (நவ 17) அதிகாலை 1.30 மணியளவில் மெக்காவிலிருந்து மதீனாவுக்கு யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, டீசல் டேங்கர் லாரி மீது மோதியதால் பயங்கர விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த 42 இந்திய யாத்ரீகர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து குறித்து இந்திய பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது,
மதீனாவில் இந்தியர்கள் விபத்தில் சிக்கியதால் மிகுந்த வருத்தம் அடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருடன் என் எண்ணங்கள் உள்ளன. காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
ரியாத்தில் உள்ள எங்கள் தூதரகம் மற்றும் ஜெட்டாவில் உள்ள துணைத் தூதரகம் அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றன.
எங்கள் அதிகாரிகள் சவுதி அரேபிய அதிகாரிகளுடனும் நெருங்கிய தொடர்பில் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b