Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத், 17 நவம்பர் (ஹி.ச.)
சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் இருந்து மெதினா நோக்கி உம்ரா புனித பயணம் மேற்கொள்வோர் 43 பேர் பேருந்து ஒன்றில் சென்று கொண்டிருந்தனர்.
அந்த பேருந்து இன்று
(நவ 17) அதிகாலை 1.30 மணியளவில் முப்ரிஹத் பகுதியருகே சென்றபோது, டீசல் ஏற்றி வந்த லாரி மீது மோதி விபத்தில் சிக்கியது.
இவ் விபத்தில் பேருந்தில் இருந்த 20 பெண்கள், 11 குழந்தைகள் உள்பட 42 உம்ரா பயணிகள் பலத்த காயமடைந்து உயிரிழந்து உள்ளனர்.
அவர்களில் பலர் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து சென்றவர்கள் என முதல்கட்ட தகவல் தெரிவிக்கின்றது.
இந்த விபத்தில் ஒரே ஒருவர் உயிர் தப்பியுள்ளார். அவர்கள் அனைவரும் மெக்காவுக்கு சென்று உம்ரா சடங்குகளை முடித்து விட்டு, மெதீனாவுக்கு திரும்பும்போது இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது.
விபத்தில் உடல்களை அடையாளம் காணும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதுபற்றி குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்க சவுதி அரசு கட்டுப்பாட்டு அறை ஒன்றை அமைத்துள்ளது.
இதன்படி, விபத்தில் சிக்கியவர்களின் குடும்பத்தினர் 79979-59754 அல்லது 99129-19545 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த விபத்து தொடர்பாக ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பு கொண்டுள்ளதாக தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது.
முதல்வர் ரேவந்த் ரெட்டி புதுடெல்லியில் உள்ள அதிகாரிகளை தொடர்பு கொண்டு, தூதரக அதிகாரிகளுடன் நெருக்கமாக செயல்படுமாறு தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / vidya.b