ஐதராபாத்தின் என். டி. ஆர். ஸ்டேடியம் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மின்சார காரில் திடீரென பற்றி எரிந்த தீ!!
ஐதராபாத், 17 நவம்பர் (ஹி.ச.) தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் என். டி. ஆர். ஸ்டேடியம் பகுதியில் உள்ள சாலையோரம் நேற்று இரவு மின்சாரத்தில் இயங்கும் கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. தீ மின்சார காரின் அருகே நிறுத
ஐதராபாத்தின் என். டி. ஆர். ஸ்டேடியம் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மின்சார காரில் திடீரென பற்றி எரிந்த தீ


ஐதராபாத், 17 நவம்பர் (ஹி.ச.)

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் என். டி. ஆர். ஸ்டேடியம் பகுதியில் உள்ள சாலையோரம் நேற்று இரவு மின்சாரத்தில் இயங்கும் கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.

அந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. தீ மின்சார காரின் அருகே நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு காருக்கும் வேகமாக பரவியது.

இந்த சம்பவம் குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கார்களில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

இந்த சம்பவத்தில் 2 கார்களும் சேதமடைந்தன.

இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / JANAKI RAM