Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 17 நவம்பர் (ஹி.ச.)
தமிழக துணை முதல்வரும், கழக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளையொட்டி, கோவை மாநகர் மாவட்ட மாணவரணி மற்றும் எஸ் எம் ஆர் சி ஆகியவை இணைத்து நடத்தும் தேசிய அளவிலான ஆப்ரோடு பைக் ரேஸ் கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்றது.
மாணவரணி துணை அமைப்பாளர் சிவபிரகாசம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பைக் ரேஸை கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை. செந்தமிழ்ச் செல்வன், மாணவரணி செயலாளர் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
மாணவரணி துணை அமைப்பாளர்கள் நந்தக்குமார், எஸ்.பாண்டி, பைந்தமிழன், கோவை ஜெகதீஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,முன்னாள் எம்பி நாகராஜ், தகவல் தொழில்நுட்ப அணி துணைச்செயலாளர் டாக்டர். மகேந்திரன், மாணவரணி துணைச் செயலாளர் கோகுல், இளைஞரணி அமைப்பாளர் தனபால், பகுதிக்கழக செயலாளர்கள் ஏஎஸ்.நடராஜ், பத்ருதீன், டெம்போ சிவா, பாபு, சத்தியா கோவை தங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த பைக் ரேஸில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் இருந்து பல்வேறு அணிகளை சேர்ந்த 25 மகளிர், 20 சிறுவர்கள் உள்ளிட்ட 150 -க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.
வெளிநாட்டினருக்கான சிறப்பு சுற்று உள்ளிட்ட 22 சுற்றுகள் நடைபெற்றது.
Hindusthan Samachar / V.srini Vasan