சென்னையில் இன்று நடைபெற இருந்த அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நவ 20 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
சென்னை, 17 நவம்பர் (ஹி.ச.) கனமழை எச்சரிக்கை காரணமாக, சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணிகளில் திமுகவின் தலையீட்டை கண்டித்து சென்னையில் இன்று (நவ 17) நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாடம் ஒத்திவைக்கப்படுவதாக அதிமுக அறிவித்துள்ளது. இது குறித்து அ.தி
சென்னையில் இன்று நடைபெற இருந்த அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நவ 20 ஆம் தேதிக்கு  ஒத்திவைப்பு


சென்னை, 17 நவம்பர் (ஹி.ச.)

கனமழை எச்சரிக்கை காரணமாக, சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணிகளில் திமுகவின் தலையீட்டை கண்டித்து சென்னையில் இன்று

(நவ 17) நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாடம் ஒத்திவைக்கப்படுவதாக அதிமுக அறிவித்துள்ளது.

இது குறித்து அ.தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணிகளில், ஆட்சியதிகாரம் கொண்டு தி.மு.க.வினரால் நிகழ்த்தப்படும் பல்வேறு முறைகேடுகளை கண்டித்து, அ.தி.மு.க. சார்பில் இன்று (நவ 17) எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக இருந்தது.

இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளது. இதனால், இந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது.

இந்த ஆர்ப்பாட்டம்

20-ம் தேதி ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நடைபெறும்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டம், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் பாலகங்கா, ஆதிராஜாராம். விருகை ரவி, தி.நகர் சத்தியா, அசோக், ராஜேஷ், புரசை பாபு, கந்தன் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Hindusthan Samachar / vidya.b