Enter your Email Address to subscribe to our newsletters

கோவில்பட்டி, 17 நவம்பர் (ஹி.ச.)
ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதம் கார்த்திகை மாதத்தில் முதல் நாள் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் திருச்செந்தூர் செல்லும் முருக பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்குவது வழக்கம்.
இன்று கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள மூக்கரை பிள்ளையார் கோவிலில் இன்று அதிகாலை முதல் ஐயப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் இன்று மாலை அணிந்து தங்களது விரதத்தை தொடங்கினர்.
ஏராளமான குழந்தைகளும் மாலை அணிந்து தங்களது விரதத்தை தொடங்கினர். கார்த்திகை முதல் நாளில் மாலை அணிந்து 41 நாட்கள் விரதம் மேற்கொண்டு சபரிமலைக்கு இருமுடி தாங்கி பக்தர்கள் செல்வது வழக்கம்.
ஐயப்ப பக்தர்கள் மட்டுமின்றி திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லக்கூடிய பக்தர்களும் இன்று மாலை அணிந்து தங்களது விரதத்தை தொடங்கினர்.
கோவில்பட்டி மூக்கரை விநாயகர் கோவில் மட்டுமின்றி கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோவில் , கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் பக்தர்கள் மாலை அணிந்து பக்தர்கள் தங்களது விரதத்தை தொடங்கினர்.
Hindusthan Samachar / Durai.J