Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 நவம்பர் (ஹி.ச)
தமிழ்நாடு அரசின் கட்டடம் மற்றும் வீட்டுவசதி சார்பில் TNHB என அழைக்கப்படும் கட்டட மற்றும் மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம் மற்றும் மேல்முறையீட்டு தீர்பாயமானது சென்னை எழும்பூரில் உள்ள தாளமுத்து நடராஜன் மாளிகையில் இயங்கி வந்தது.
இந்நிலையில் இந்த அமைப்புக்கு சென்னை அண்ணா நகரில் ரூ.97 கோடி செலவில் புதிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
இந்த அலுவலக கட்டிடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றைய(நவ 17) தினம் தலைமை செயலகத்தில் இருந்து காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இத்தகைய நிகழ்ச்சியில் தமிழக ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவரும், முன்னாள் தலைமைச் செயலாளருமான சிவதாஸ் மீனா மற்றும் பல்வேறு உறுப்பினர்கள், தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / vidya.b