Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 17 நவம்பர் (ஹி.ச)
மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் மூலமாக இதுவரை 2.50 கோடி மக்களை காத்துள்ளதாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
நான்கு ஆண்டுகளில் 2.50 கோடி மக்களை மக்களைத் தேடி மருத்துவம் மூலமாக காக்கப்பட்டுள்ளனர்.
தடம் மாறாத பயணம் - தொற்றா நோய்களின் கட்டுப்பாடு எனச் சாதனை படைத்து, ஐ.நா. விருதை வென்ற இத்திட்டத்தின், 2 கோடியே 50 லட்சமாவது பயனாளியான தஞ்சை மாவட்டம் தென்னங்குடியைச் சேர்ந்த மனோன்மணி அவர்களுக்கு மருந்துப் பெட்டகத்தை வழங்கியுள்ள மா.சுப்பிரமணியனுக்கு வாழ்த்துகள்.
நலமான தமிழ்நாட்டை உருவாக்கிடும் இத்திட்டத்தைக் கண்காணித்து சிறப்புறச் செயல்படுத்திவரும் துறையின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும், களத்தில் உறவென நின்று மக்களைக் கவனித்துக் கொள்ளும் மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள் என்று முதல்வர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ