Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 17 நவம்பர் (ஹி.ச.)
கோயம்புத்தூரில் 18-வது ஆண்டு விழாவை முன்னிட்டு கோவையில் பல்வேறு பகுதியில் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் பொதுமக்கள் இடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக போக்குவரத்து காவல் துணை ஆணையர் அசோக் குமார் பேரணியை தொடங்கி வைக்கும் முன்பு இருசக்கர வாகனங்களில் அதிக சைலன்ஸர்கள் உபயோகப்படுத்தி அதிக ஒலி எழுப்புவதனால் சாலையில் செல்லும் முதியவர்கள் மிகவும் அவதி அடைந்து வருவதாகவும் இது போல் சைலன்சர்களை பயன்படுத்தக்கூடாது என்று பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது பேசிக் கொண்டிருக்கும் போது சைலன்ஸர்களை ஆல்டர் செய்து ஓட்டுவதால் குழந்தைகள்,பெற்றோர்கள் பொதுமக்கள்,முதியோர்கள் அனைவரும் பாதிக்கின்றனர் என பேசி கொண்டு இருக்கும் போது அதிக ஒலி எழுப்பக்கூடிய இருசக்கர வாகனத்தில் வந்த 20-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்யுமாறு மேடையில் கூறினார்.
அதனை தொடர்ந்து 20-க்கு மேற்பட்ட இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் இனி இது போல அதிக ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர்களை பயன்படுத்தக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும் அந்த 20 இருசக்கர வாகனங்களை பேரணியில் கலந்து கொள்ள விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
Hindusthan Samachar / V.srini Vasan