சவுதி பேருந்து விபத்தில் பலியான 42 பேரின் குடும்பத்தினருக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்
சென்னை, 17 நவம்பர் (ஹி.ச) தெலங்கானா மாநிலத்தில் இருந்து மெக்காவிற்கு புனிதப் பயணம் மேற்கொண்டு சவுதி அரேபியாவில் உம்ரா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று இன்று காலை டீசல் டேங்கர் லாரியுடன் மோதி விபத்துக்குள்ளான நிலையில்அந்தப் பேருந்தில் பயணித்த 4
Eps


Tweet


சென்னை, 17 நவம்பர் (ஹி.ச)

தெலங்கானா மாநிலத்தில் இருந்து மெக்காவிற்கு புனிதப் பயணம் மேற்கொண்டு சவுதி அரேபியாவில் உம்ரா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று இன்று காலை டீசல் டேங்கர் லாரியுடன் மோதி விபத்துக்குள்ளான நிலையில்அந்தப் பேருந்தில் பயணித்த 42 புனித பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

தெலங்கானா மாநிலத்தில் இருந்து மெக்காவிற்கு புனிதப் பயணம் மேற்கொண்டு, மதீனா நகருக்கு செல்லும் வழியில் பேருந்து விபத்தில் சிக்கி 42 இந்தியர்கள் உயிரிழந்ததாக வரும் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், உயிரிழந்தோர் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ