செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் வெளியேற்றம் 1,200 கனஅடியாக உயர்வு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
சென்னை, 17 நவம்பர் (ஹி.ச) தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னைக்கு நீர் ஆதாரமாக திகழும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் இருந்து நீர் திறப்பு அதிகரிகப்பட்டுள்ளது. இதில் செம்பரம்பாக்கம் ஏரியானது சென்னை ம
செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் வெளியேற்றம் 1,200 கனஅடியாக உயர்வு -  கரையோர மக்களுக்கு எச்சரிக்கை


சென்னை, 17 நவம்பர் (ஹி.ச)

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னைக்கு நீர் ஆதாரமாக திகழும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் இருந்து நீர் திறப்பு அதிகரிகப்பட்டுள்ளது.

இதில் செம்பரம்பாக்கம் ஏரியானது சென்னை மெட்ரோ நகர குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரியத்தின் மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து1,200 கனஅடியாக நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் வெளியேற்றம் 600 கன அடியில் இருந்து 1,200 கன அடியாக உயர்த்தப்பட்டது.

கனமழை முன்னெச்சரிக்கையை ஒட்டி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் வெளியேற்றம் அதிகரித்துள்ளது.

இதில் பெரும்பாலான பகுதியானது அடையாற்றில் சென்று கலக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பால் தாழ்வான பகுதிகளாக இருக்கும் குன்றத்தூர், காவனூர், வழுதளமேடு, திருநீர்மலை, திருமுடிவாக்கம் உள்ளிட்ட கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b