Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 17 நவம்பர் (ஹி.ச.)
கோவை, சூலூர் குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் என்பவர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனது சொத்தை சிலர் அபகரிக்க மிரட்டல் விடுப்பதாக புகார் மனு ஒன்றை அளித்து உள்ளார்.
அதில் அதிக வட்டிக்குக் கடன் கொடுத்து, ஆவணங்களைப் பிணையமாகப் பெற்ற அவர்கள், சொத்துக்களை மிரட்டி அபகரித்ததுடன், உயிருக்கு அச்சுறுத்தல் விடுப்பது, அத்துமீறி நுழைந்து குடும்ப உறுப்பினர்களுக்குத் தொடர்ந்து தொல்லை கொடுக்கும் சந்திரசேகர் என்பவர் மீது உடனடியாகக் சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்து உள்ளார்,
இது தொடர்பாக அவரது மருமகன் லிங்கப்பசாமி செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
எனது மாமனார் குடும்பத்தின் நிதி நெருக்கடி மற்றும் விவசாயச் செலவினங்களைச் சமாளிப்பதற்காக, ஈரோட்டைச் சேர்ந்த சிவபாலன் மற்றும் ஷாலினி என்பவர்களின் மூலமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சந்திரசேகர் என்பவரிடம் வட்டிக்குப் பணம் கடனாகப் ரூபாய் 24 இலட்சம் பெற்று, அதற்கு பிணையமாக , தனது நிலத்தின் ஆவணங்களை வழங்கியதாக தெரிவித்தார்.
இந்நிலையில் தொடர்ச்சியாக
தனது சொந்த தொழிலுக்காக பணம் திரட்ட வேண்டிய கட்டாயத்தில் ஈரோட்டில் அவருக்குச் சொந்தமான ஒரு சொத்தை, சந்திரசேகருக்கு விற்பனை செய்தார்.
ஆனால் தமக்கு உரிய தொகையை தராமல், தமது மாமனாரிடம் கொடுத்த கடனுக்கு ஈடாக இரண்டு ஆவண பரிமாற்றங்களுக்கும் கடனை வசூலிக்கும் நோக்கத்துடன் சந்திரசேகர் வற்புறுத்ததோடு தற்போது மூன்றாவது உள்ள சொத்தை அபகரிக்கும் நோக்கத்தில் அடியாட்களை வைத்து மிரட்டுவதாக தெரிவித்தார்.
சந்திரசேகர், அரசியல் செல்வாக்கு மிக்க நபராக இருப்பதால், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, நிலத்தின் சந்தை மதிப்பை விட மிக அதிகமாகப் பணம் கேட்டு, என்னையும் எனது குடும்பத்தினரையும் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறார்.
அவர் உள்ளூர் அமைச்சரின் ஆதரவு தனக்கு இருப்பதாகக் கூறி மேலும் மிரட்டுவதாக தெரிவித்தார்.
ஈரோட்டை சேர்ந்த ஆளுங்கட்சி அமைச்சரை தொடர்பு படுத்தி கோவையில் புகார் மனு அளித்து உள்ள இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Hindusthan Samachar / V.srini Vasan