Enter your Email Address to subscribe to our newsletters

ரியாத் , 17 நவம்பர் (ஹி.ச.)
சவுதி அரேபியாவின் மதீனா அருகே இன்று (நவ 17) அதிகாலை பேருந்து -டீசல் லாரி மோதி விபத்துக்குள்ளானது. மெக்காவில் இருந்து மதீனாவிற்கு உம்ரா புனித பயணிகள் சென்ற போது நிகழ்ந்த இந்த கோர விபத்தில் பேருந்து தீ பற்றி எரிந்தது. இந்த பேருந்தில் பயணித்த இந்தியர்கள் 42 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
இதில், ஐதராபாத்தை சேர்ந்த 20 பெண்கள், 11 குழ ந்தைகள் என்பது தெரியவந்துள்ளது. மற்ற உடல்களை அடையாளம் காணும் நடந்து வருகிறது. இது தொடர்பாக ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பு கொண்டுள்ளதாக தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது,
மதீனாவில் இந்தியர்கள் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானது அறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் மற்றும் குடும்பங்களுக்கு ரியாத் தூதரகம் மற்றும் ஜெட்டா துணைத் தூதரகம் முழு ஆதரவு அளித்து வருகின்றன
துயரமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம்.
என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜெட்டா துணைத் தூதரகம் வெளியிட்டிருக்கும் பதிவில், 24 மணிநேர கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய தகவல்களை அறிய 8002440003 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b