Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 17 நவம்பர் (ஹி.ச.)
பாரத பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற புதன்கிழமை19.11.2025 ஆம் தேதியன்று கோவை மாநகருக்கு வருகை புரிவதால் நண்பகல் 12.00 மணி முதல் 16.00 மணி வரை நேரத்திற்கு தகுந்தாற் போல் கீழ்க்கண்டவாறு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.
கோவை மாநகருக்குள் வரும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து நகருக்குள் வரும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் நீலாம்பூரில் இருந்து ஏர்போர்ட் வழியாக நகருக்குள் வருவது தடை செய்யப்படுகிறது.
மாறாக இந்த வாகனங்கள் நீலாம்பூரில் இருந்து L&T பைபாஸ் வழியாக சிந்தாமணிபதூர், ஒண்டிபுதூர், சிங்காநல்லூர் வழியாக நகருக்குள் வரலாம்.
நகருக்குள் இருந்து அவினாசி ரோடு வழியாக வெளியே செல்லும் பேருந்து மற்றும் கனரக வாகனங்கள்
லட்சுமி மில் சந்திப்பில் U-Turn செய்து புலியகுளம், இராமநாதபுரம், சிங்காநல்லூர் வழியாக L&T பைபாஸ் அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
நகருக்குள் வரும் இலகுரக வாகனங்கள் நீலாம்பூர் பகுதியில் இருந்து நகருக்குள் வரும் இலகுரக வாகனங்கள் தொட்டிப்பாளையம் பிரிவில் வலதுபுறம் திரும்பி தொட்டிப்பாளையம், கைகோலப்பாளையம், காளப்பட்டி நால் ரோடு, விளாங்குறிச்சி வழியாக நகருக்குள் வரலாம்.
நகருக்குள் இருந்து அவினாசி ரோடு வழியாக செல்லும் அரசு பேருந்துகள் மற்றும் இலகுரக வாகனங்கள்
அவினாசி ரோடு, டைட்டல் பார்க் சந்திப்பில் U -Tum செய்து காமராஜர் ரோடு, சிங்காநல்லூர் ரோடு வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். மேலும் நகருக்குள் இருந்து வெளியே செல்லும் இலகுரக வாகனங்கள் நேரத்திற்கு தகுந்தாற் போல் சித்ரா வழியாக அனுப்பப்படும்.
19.11.2025 தேதியன்று பாரத பிரதமர் வருகையையொட்டி நண்பகல் 12.00 மணி முதல் 15.00 மணி வரை விமான நிலையத்திற்கு உள்ளே செல்லும் வாகனங்கள் மற்றும் கால் டாக்ஸிகள் தடை செய்யப்படுகிறது.
எனவே அன்றைய தினம் விமான நிலையத்திற்கு வருபவர்கள் 12.00 மணிக்கு முன்பாக விமான நிலையம் வர கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 12.00 மணிக்கு மேல் வருபவர்கள் சித்ரா சந்திப்பில் இறங்கி விமான நிலையத்திற்கு நடந்து செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அவினாசி ரோடு, ஜி.டி நாயுடு மேம்பாலம் பாரத பிரதமர் பாதுகாப்பு வாகனங்கள் செல்லும் போது, 19.11.2025 தேதியன்று நண்பகல் 12.00 முதல் 15.00 மணி வரை மூடப்படும். எனவே வாகன ஓட்டிகள் அதற்கு தகுந்தாற் போல் மாற்று பாதையை தேர்வு செய்து செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.
19.11.2025 ஆம் தேதியன்று காலை 08.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை கனரக வாகனங்கள் நகருக்குள் வர முற்றிலும் தடை செய்யப்படுகிறது.
16.11.2025 முதல் 19.11.2025 வரை விமான நிலையத்தில் உள்ள வாகன நிறுத்தத்தில் நான்கு சக்கர, இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்த தடை செய்யப்படுகிறது.
தற்போது நிறுத்தப்பட்டு உள்ள வாகனங்களை அகற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பாரத பிரதமர் நிகழ்ச்சியை துவக்கி வைத்த பின்பு மாலை 4 மணிக்கு மேல் பார்வையாளாகள் அனுமதிக்கப்படுவர்.
எனவே மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு கொடுத்து, தங்களது பயண திட்டம் மற்றும் பயண பாதையை வகுத்து விரைவான பயணத்தை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Hindusthan Samachar / V.srini Vasan