கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கோரி மனு
சென்னை, 17 நவம்பர் (ஹி.ச.) கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கோரிய மனு தொடரப்பட்டிருந்தது கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில்
T.malai


சென்னை, 17 நவம்பர் (ஹி.ச.)

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கோரிய மனு தொடரப்பட்டிருந்தது

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் அதிகளவில் திரள்வர் என்பதால் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார்

கூட்டத்தை கட்டுப்படுத்த போதுமான காவல்துறையினரை பணியில் அமர்த்த வேண்டும் எனவும், கிரிவலப்பாதையில் போலி சாமியார்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளை அனுமதிக்க கூடாது எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த மனுவில் நவம்பர் 24ஆம் தேதிக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும், டிஜிபிக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேபோன்று வழக்கின் விசாரணை நவம்பர் 24-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ