பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கியதை எதிர்த்து, மனிதநேய மக்கள் கட்சி மனு
சென்னை, 17 நவம்பர் (ஹி.ச.) பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கியதை எதிர்த்து, மனிதநேய மக்கள் கட்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கியதை எதிர்த்து, மனிதநேய
Mnk


சென்னை, 17 நவம்பர் (ஹி.ச.)

பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கியதை எதிர்த்து, மனிதநேய மக்கள் கட்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.

பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கியதை எதிர்த்து, மனிதநேய மக்கள் கட்சி சார்பில், பொதுச்செயலாளர் அப்துல் சமது தொடர்ந்த வழக்கு விசாரணையில் ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்க வகை செய்யும் விதிகள்

2014 ம் ஆண்டு தான் கொண்டு வரப்பட்டன என மனிதநேய மக்கள் கட்சி தரப்பு தெரிவித்தது.

விதிகளின்படி, தேர்தல் ஆணையர்கள் தான் உத்தரவு பிறப்பிக்க முடியுமே தவிர, செயலாளர் இந்த உத்தரவை பிறப்பிக்க முடியாது எனவும் மனிதநேய மக்கள் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் இந்திய தேர்தல் ஆணையம் நான்கு வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேபோல் வழக்கின் விசாரணை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ