Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 நவம்பர் (ஹி.ச)
சென்னை பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பாலத்தின் வடக்கு பகுதியில் உள்ள பூங்காவில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை அமைச்சர் சேகர்பாபு ,மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவியுடன் ஆய்வு மேற் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு,
தமிழகத்தில் இருந்து கேரளா ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்காக தமிழ்நாடு அரசு சார்பாக தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
திருவாங்கூர் தேவஸ்தானத்தில் அதற்கான அனுமதி பெறப்பட்டு கன்னியாகுமரியில் இருக்கின்ற இரண்டு அதிகாரிகள் சுழற்சி முறையில் பணிகள் இருக்கிறார்கள் என தெரிவித்தார்.
எஸ்.ஐ.ஆர் க்கு எதிராக திமுக மட்டும் தான் களத்தில் நின்று கொண்டிருக்கிறது எனவும் எஸ் ஐ ஆர் கொண்டு வந்தாலும் அதில் இருக்கக்கூடிய குளறுபடிகளை கலைத்து சூட்சுமங்களை தகர்த்து எறிந்து வருகிறார் முதலமைச்சர் எனவும் தெரிவித்தார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக கொளத்தூர் சட்டமன்ற தொகுதிகளில் திமுக பாக முகவர்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான அறிவுரைகளை கொடுத்து இருக்கிறார் முதலமைச்சர் அவர்கள்
வஞ்சக சூழ்ச்சி வலையை மத்திய அரசு விரித்தாலும் அதை அறிந்து திமுக எப்போதும் செயல்படும் உதய சூரியன் மீண்டும் 2026 ல் உதயமாகும் என தெரிவித்தார்.
திருக்கோயில் காவலாளிகள் கொலை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், சம்பவம் நடந்த இரண்டு நாட்களில் குற்றவாளிகளை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இது சட்டத்தின் ஆட்சி சாத்தான்களின் ஆட்சி அல்ல எனவும் சட்டத்தின் முன் குற்றவாளியை நிறுத்தப்பட்டு உடனடியாக தண்டனையை நிச்சயம் பெற்று தருவோம் என தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ