தீர்வு ஏற்படும்வரை வெளிமாநிலங்களுக்கு 600 ஆம்னி பேருந்துகள் இயக்கப்படமாட்டாது - ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
சென்னை, 17 நவம்பர் (ஹி.ச.) கடந்த 7-ம் தேதி தமிழகத்தில் இருந்து, கேரள மாநிலம் சென்ற தமிழக ஆம்னி பேருந்துகளுக்கு, அம்மாநில போக்குவரத்து அதிகாரிகள், 70 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து ஆம்னி பேருந்து உரி
வெளிமாநிலங்களுக்கு 600 ஆம்னி பேருந்துகள் இயக்கப்படமாட்டாது - ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு


சென்னை, 17 நவம்பர் (ஹி.ச.)

கடந்த 7-ம் தேதி தமிழகத்தில் இருந்து, கேரள மாநிலம் சென்ற தமிழக ஆம்னி பேருந்துகளுக்கு, அம்மாநில போக்குவரத்து அதிகாரிகள், 70 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர், வெளி மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்குவதை நிறுத்தினர். ஆனால், இப்பிரச்னைக்கு இதுவரை தீர்வு எட்டப்படவில்லை.

இதுகுறித்து, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில்,

ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிப்பதால் பேருந்துகளை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 7 நாட்களாக நடைபெற்று வரும் வேலை நிறுத்தத்தால் ரூ.22 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஸ்டிரைக்கால் 20,000க்கும்மேற்பட்ட ஆம்னி பேருந்து தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா, கர்நாடக அரசுகளுடன் முதலமைச்சர் பேசி, சாலை வரியில் இருந்து விலக்குதர வழிவகை செய்ய வேண்டும்.

முதலமைச்சர் இப்பிரச்சனையில் தலையிட்டு நல்ல தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும்.

தீர்வு ஏற்படும்வரை வெளிமாநிலங்களுக்கு இயக்கப்பட வேண்டிய 600 ஆம்னி பேருந்துகள் இயங்காது.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

Hindusthan Samachar / vidya.b