Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 17 நவம்பர் (ஹி.ச.)
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் ஒப்பந்த தூய்மை பணி வாகன ஓட்டுனார்களாக பணிபுரிந்து வந்த பிரபாகரன் பெருமாள் சிவசங்கர் பிரகாஷ் ஆகிய நான்கு பேரை நான்கு மாதங்களுக்கு முன்பு அந்த ஒப்பந்த நிறுவனம் பணிநீக்கம் செய்தது.
உரிய காரணங்கள் இன்றி பணிநீக்கம் செய்யப்பட்டதாக சக வாகன ஓட்டுனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் தற்போது வரை அவர்கள் பணிக்கு எடுக்கப்படவில்லை என்று கூறி மாநகராட்சி அலுவலகம் முன்பு சக ஒப்பந்த வாகன ஓட்டுநர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் தற்பொழுது உள்ள ஒப்பந்த நிறுவனம் வாகனங்களை சுடுகாட்டில் நிறுத்தி வைக்க கூறுவதாகவும் குற்றம் சாட்டியுள்ள அவர்கள் தங்களுக்கான உரிய சம்பளம் பண பலன்களை வழங்காமல் இருப்பதாக குற்றம் சாட்டினர்.
மாநகராட்சி அலுவலகம் முன்பு சுமார் 50-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தீமைப்பணி வாகன ஓட்டுநர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
Hindusthan Samachar / V.srini Vasan