சவுதி பேருந்து விபத்தில் 42 இந்தியர்கள் உயிரிழப்பு - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
சென்னை, 17 நவம்பர் (ஹி.ச.) சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் இருந்து 43 பேர் பயணிகளுடன் மெதினா நோக்கி உம்ரா புனித பயணம் மேற்கொண்ட பேருந்து ஒன்று இன்று (நவ 17) அதிகாலை 1.30 மணியளவில் டீசல் ஏற்றி வந்த லாரி மீது மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத
சவுதி பேருந்து விபத்தில் 42 இந்தியர்கள் உயிரிழப்பு - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்


சென்னை, 17 நவம்பர் (ஹி.ச.)

சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் இருந்து 43 பேர் பயணிகளுடன் மெதினா நோக்கி உம்ரா புனித பயணம் மேற்கொண்ட பேருந்து ஒன்று இன்று (நவ 17) அதிகாலை 1.30 மணியளவில் டீசல் ஏற்றி வந்த லாரி மீது மோதி விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் இருந்த 20 பெண்கள், 11 குழந்தைகள் உள்பட 42 உம்ரா பயணிகள் பலத்த காயமடைந்து உயிரிழந்து உள்ளனர்.

அவர்களில் பலர் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து சென்றவர்கள் என முதல்கட்ட தகவல் தெரிவிக்கின்றது.

இந்நிலையில் துயரமான பேருந்து விபத்தில் பல இந்திய உம்ரா யாத்ரீகர்கள் உயிரிழந்த சம்பவத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது,

மதீனா அருகே நடந்த துயரமான பேருந்து விபத்தில் பல இந்திய உம்ரா யாத்ரீகர்கள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த துயரமான நேரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காயமடைந்த யாத்ரீகர் முழு மருத்துவ சிகிச்சை பெற்று விரைவில் குணமடைவார் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b