Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 17 நவம்பர் (ஹி.ச.)
கோவை கொடிசியா மைதானத்தில் தி.மு.க கோவை மாநகர் மாணவர் அணி சார்பில் அகில இந்திய அளவிலான மோட்டார் பந்தயம் போட்டி நடைபெற்றது.
இதில் தமிழகம்,கேரளா, கர்நாடகா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்.
ஆண்கள் பெண்கள் என தனித்தனி சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.
இதில் தி.மு.க மாநில மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க கோவை மாநகர மாணவரணி சார்பில் அகில இந்திய மோட்டார் பந்தயம் நடைபெற்றது.
இந்தியாவிற்கு தமிழ்நாடு சில விஷயங்களை வழிகாட்டி கொண்டு இருக்கும்.
இந்த விளையாட்டு துறை அகில இந்தியாவில் தமிழ்நாட்டில் புதிய இளைஞர்களை கண்டுபிடிப்பதற்கும் புது விதமான விளையாட்டுகளை அறிமுகப்படுத்துவதற்கும் ஒரு விளையாட்டின் தலைநகரமாக தமிழ்நாடு மாறிக் கொண்டு இருக்கிறது.
தொடர்ந்து பத்து நாட்கள் கோவை மாவட்டத்தில் விளையாட்டு போட்டிகள் நடைபெறும்.
இந்தியா முழுவதும் இருந்து 9 மாநிலங்களில் இருந்து விளையாட்டு வீரர்கள் பங்கேற்று உள்ளனர் என தெரிவித்தார்.
Hindusthan Samachar / V.srini Vasan