அற நிலையத்துறையை விட்டு சேகர்பாபு விலக வேண்டும் - தமிழிசை சௌந்தர்ராஜன்
சென்னை, 17 நவம்பர் (ஹி.ச.) சென்னை திருவான்மையூர் பகுதியில் நடைபெறும் மத்திய அரசின் நலத்திட்ட விளக்க சிறப்பு முகாமை பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை பேசுகையில், எஸ் ஐ ஆர் பற்றிய
Thamilisai


சென்னை, 17 நவம்பர் (ஹி.ச.)

சென்னை திருவான்மையூர் பகுதியில் நடைபெறும் மத்திய அரசின் நலத்திட்ட விளக்க சிறப்பு முகாமை பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார்

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை பேசுகையில்,

எஸ் ஐ ஆர் பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் இருக்க வேண்டும்.

படிவம் வரவில்லை என்றால் கேட்க வேண்டும் இல்லை என்றால் இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

எஸ் ஐ ஆர் என்றால் ஏதோ பூதம் என்று பயமுறுத்துகிறார்கள்.

இது ஒரு ஜனநாயக நடவடிக்கை. இந்த எஸ் ஐ ஆர் காரணமாக தான் பீகாரில் 69 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குகள் திருடப்பட்டது என்றால் சதவீதம் குறையுமா? அதிகமாகும்? ஸ்டாலினுக்கும், இந்தியா கூட்டணி சார்ந்தவர்களுக்கும் பீகார் மக்கள் பதிலளித்து உள்ளனர். ஜனநாயக ரீதியான நடவடிக்கைக்கு ஜனநாயக ரீதியாக மக்கள் பதிலளித்துள்ளனர்.

நேற்று விஜய் கட்சி இதற்கு ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்க கூடாது தூய்மைப் படுத்தப்பட்ட பட்டியல் நமக்கு கிடைக்கப் போகிறது

அறிவாளிகள் தான் அறிவு திருவிழா நடத்துவார்கள், அறிவில்லாதவர்கள் இதைப்பற்றி கவலைப்பட வேண்டாம் என்று உதயநிதி பேசுகிறார். அறிவாளியாக இருப்பதனால்தான் நீங்கள் துணை முதல்வராக ஆனீர்களா? நீங்கள் வாரிசாக இருப்பதனால் துணை முதல்வர் ஆனீர்கள்.

உதயநிதி அவர்களே ஆணவம் வேண்டாம் அறிவு திருவிழா என்று பெயர் வைத்துக் கொண்டு, நடத்திக்கொண்டால் நீங்கள் அறிவாளி மாதிரியும்.. மற்றவர்களெல்லாம் அறிவிலிகள் மாதிரியும் பேசுகிறீர்கள்.

நீங்கள் முழு அறிவாற்றல் காரணமாக துணை முதல்வராகவில்லை. திருடனுக்கு தான் போலீஸ்காரரை பார்த்து பயம் என்று சொல்கிறார்.

அதையும் நான் திருப்பி கேட்கிறேன் SIR ஐ பார்த்து ஏன் பயப்படுகிறீர்கள்? நீங்கள் ஓட்டுகளை திருடுபவர்களாக இருப்பதால்தான் எஸ் ஐ ஆர் ஐ பார்த்து பயப்படுகிறீர்கள்

எஸ் ஐ ஆர் நடந்த பிறகு எங்கெல்லாம் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்று இருந்ததோ அங்கெல்லாம் பாஜக வெற்றி பெறுவதாக செல்வபெருந்தவையும் மாணிக்கம் தாகூரும் சொல்கிறார்கள். போலி வாக்காளர்கள் மூலம் வெற்றி பெற்றதை அவர்களை ஒப்புக்கொள்கிறார்கள்.

வாக்காளர்களை நீக்கிவிட்டார்கள் என்று பொய் சொன்னதனால்தான் ராகுல் காந்திக்கு பீகார் மக்கள் மரண அடி கொடுத்தார்கள். ஸ்டாலின் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பீகார் தேர்தலுக்கு பிறகு பாடங்களை கற்றுக் கொண்டதாக ஸ்டாலின் சொல்கிறார். காங்கிரஸ் உடன் இருந்தால் திமுகவையும் மூழ்கடித்து விடுவார்கள் என்பதை இன்னொரு பாடமாக நீங்கள் கற்றுக் கொள்ளுங்கள்.

வருவாய்த்துறை அதிகாரிகள் எஸ் ஐ ஆர் க்கு ஒத்துழைப்பு கொடுக்க முடியாது என்று போராட்டம் நடத்துகிறார்கள். ஆளும் அரசு மறைமுகமாக இப்படிப்பட்ட போராட்டங்களை ஊக்கப்படுத்துகிறார்கள். அரசு ஊழியர்கள் தேர்தல் ஆணையத்திற்கு உதவி செய்வதும் பணிதான்

தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இந்தியா கூட்டணிக்கும் தான் போட்டி விஜய் சொல்வது போல் திமுகவுக்கும் tvk க்கும் இல்லை ஏனென்றால் திமுக தனியாகவே நிற்கவில்லை, கூட்டணிக்குதான் போட்டி.

திமுகவை வீட்டுக்கு அனுப்ப வியூகம் வகுக்கப்பட வேண்டும். அந்த வியூகத்தை சரியாக பயன்படுத்திக் கொள்பவர்களை மக்கள் பாராட்டுவார்கள்.விஜய் பிரசாந்த் கிஷோரிடமிருந்து அறிவுரை கேட்டது போல, அவரிடமிருந்து பாடமும் கற்றுக்கொள்ள வேண்டும்

அதிமுக போராட்டம் அறிவித்தது எஸ் ஐ ஆர் க்கு எதிராக இல்லை, எஸ் ஐ ஆர் ஐ தவறாக வழிநடத்தும் திமுகவுக்கு எதிராக திமுக இதில் முறைகேடு ஈடுபடக் கூடாது என்பதற்காக தான் போராட்டம் செய்கிறார்கள். எஸ் ஐ ஆர் பணிகள் ஒரே மாதத்தில் நடப்பதை சவாலாக பார்க்கவில்லை. ஏனென்றால் இன்றைக்கு தொழில்நுட்பங்கள் அதிகரித்து விட்டது.

பீகாரில் 60 லட்சம் வாக்குகளை காணவில்லை என்று சொல்கிறார்கள். 60 லட்சம் பேரில் ஒருவர் கூட வந்து என் போராடவில்லை. அங்கு போட்டி போட்ட காங்கிரசார் கூட வாக்குகள் திருடப்பட்டு உள்ளது. மறுவாக்கு பதிவு வேண்டுமென்று ஏன் கேட்கவில்லை?

ஏற்கனவே ஏறக்குறைய 6 கோடி படிவங்கள் வினியோகிக்கப்பட்டு விட்டது. ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு பி எல் ஓ என்று பிரிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் வாக்காளர்கள் என்றால் ஒரு வாரத்திலேயே இந்த பணி முடிந்துவிடும்.

தேர்தல் ஆணையம் என்ன பணி கொடுத்தாலும் அரசு ஊழியர்கள் செய்ய வேண்டும் என்பது அரசியலமைப்பில் உள்ளது. வருவாய்த்துறை ஊழியர்கள் 24 மணி நேரமும் சிறப்பாக செயலாற்ற முடியாததற்கு இதுதான் பிரச்சனை என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதில் அரசியல் இருக்கலாம். வருவாய் துறை அலுவலர்களை ஆளும்கட்சி தூண்டி விட்டு இருக்கலாம். இந்த ஜனநாயக கடமையில் வருவாய்த்துறை ஊழியர்களும் பங்கேற்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

சேகர்பாபுவை வன்மையாக கண்டிக்கிறேன். ஒரு அர்ச்சகர், அம்மா கையில் தாமரை இருக்கிறது, அனைவரின் உள்ளத்திலும் மகிழ்ச்சியாக தாமரைப் போன்று இருக்க வேண்டும் என்று சொன்னதை அரசியல் செய்ய வேண்டாம் என்று சொல்கிறீர்கள். ஆலயத்திற்குள் தாமரையே இருக்கக் கூடாதா? லக்ஷ்மி, சரஸ்வதி எல்லாம் தாமரையின் மீதுதான் உட்கார்ந்திருப்பார்கள்.

தாமரையைப் பற்றி பேசுபவர்கள் ஆலயத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று சொன்னால் முதலில் அறநிலையத்துறையை விட்டு சேகர்பாபு வெளியேற வேண்டும்

தாமரையைப் பார்த்து அரசியலில் மட்டுமல்ல ஆன்மீகத்திலும் அரண்டு போகிறார்கள். தாமரையை தவிர்த்து ஆன்மீகமும், கிடையாது தாமரையை தவிர்த்து அரசியலும் கிடையாது. அந்த அர்ச்சகர் மீது நடவடிக்கை எடுத்தால் நிச்சயமாக பாஜக எதிர்க்கும்.ஆன்மீகத்தில் அரசியலை சேகர்பாபு தான் கலக்கிறார். சூரியனுக்கு சுப்ரபாதம் பாடுவதை நாங்கள் எதிர்த்தோமா? குறுகிய மனப்பான்மையை அறநிலையத்துறையில் காண்பிக்க வேண்டாம் என்று சேகர்பாபுவுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்.

விஜய்க்கு பிரசாந்த் கிஷோர் பாடம் கற்றுக் கொடுத்துவிட்டு சென்றார். தற்போது பாடம் கற்றுக் கொடுத்தவர் என்ன ஆனார் என்பதை விஜய் கற்றுக்கொள்ள வேண்டும் பிரதமர் பிரசாந்த் கிஷோரை வியூக அமைப்பாளராக மட்டும் தான் பார்த்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ