வாணியம்பாடியில் தகாத உறவால் பெண்ணின் கணவரை தாக்கிய நபர் கைது!
திருப்பத்தூர், 17 நவம்பர் (ஹி.ச.) திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஒரு தம்பதியர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்களுக்கு மேலான நிலையில் 5 வயதில் ஒரு மகனும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், அந்த குழந்தைகள
VaniyamBadi Illegal


திருப்பத்தூர், 17 நவம்பர் (ஹி.ச.)

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஒரு தம்பதியர் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்களுக்கு மேலான நிலையில் 5 வயதில் ஒரு மகனும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில், அந்த குழந்தைகளில் தாய், பிரேம்குமார் என்பவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது.

அது குறித்து அறிந்த அப்பெண்ணின் கணவர், மனைலியை பலமுறை கண்டித்து பிரேம்குமார் உடனான உறவை துண்டித்துக் கொள்ளுமாறும் கூறியுள்ளார்.

இந்நிலையில் கணவனின் அறிவுறுத்தலை கேட்டு மனைவி பிரேம்குமாருடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால் பிரேம்குமார், பெண்ணின் கணவர் மீது ஆத்திரமடைந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் பெண்ணின் கணவர் தாக்க நினைத்த பிரேம்குமார், நள்ளிரவில் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு பின் சுவர் மீது ஏறி குதித்து வீட்டின் படுக்கை அறைக்குள் சென்ற பிரேம்குமார், அந்த பெண் குடும்பத்துடன் உறங்கிக் கொண்டிருப்பதை பார்த்துள்ளார்.

தொடர்ந்து அப்பெண்ணின் கணவரை அவதூறாக பேச தொடங்கிய நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. இதையடுத்து பிரேம்குமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு அப்பெண்ணின் கணவரை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

இதில் தலை, கை, கால் உள்ளிட்ட ஐந்து இடங்களில் படுகாயமடைந்த அப்பெண்ணின் கணவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த நிலையில் அவரது மனைவி மற்றும் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து மில்லத் நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சம்பவத்தில் ஈடுபட்ட பிரேம்குமாரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் அவர் தமிழக - கர்நாடகா மாநில எல்லையான பாகலூர் பகுதியில் கட்டிட வேலையில் ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

பின்னர், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN