Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 நவம்பர் (ஹி.ச.)
சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக 7 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு ரெயில்கள் அனைத்தும் சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் போத்தனூர் வழியாக இயக்கப்பட உள்ளது. அதன்விவரம் வருமாறு:-
* தெலுங்கானா மாநிலம் சார்லபள்ளியில் இருந்து வருகிற 24-ந்தேதி காலை 10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.07115), மறுநாள் மாலை 5.30 மணிக்கு கோட்டயம் சென்றடையும். மறுமார்க்கமாக, கோட்டயத்தில் இருந்து வருகிற 25-ந்தேதி இரவு 8.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (07116), புறப்பட்டதில் இருந்து 3-வது நாள் அதிகாலை 2.30 மணிக்கு சார்லபள்ளி சென்றடையும்.
* தெலுங்கானா மாநிலம் சார்லபள்ளியில் இருந்து நாளை (செவ்வாய்கிழமை) முதல் ஜனவரி 13-ந்தேதி வரையில் (செவ்வாய்கிழமை மட்டும்) காலை 11.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (07113), மறுநாள் இரவு 10 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து வருகிற 20-ந்தேதி முதல் ஜனவரி 15-ந்தேதி வரையில் (வியாழக்கிழமை மட்டும்) அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (07114), மறுநாள் மதியம் 12.30 மணிக்கு சார்லபள்ளி சென்றடையும்.
* தெலுங்கானா மாநிலம் சார்லபள்ளியில் இருந்து இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற ஜனவரி 19-ந்தேதி வரையில் (திங்கட்கிழமை மட்டும்) மதியம் 12 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (07107), மறுநாள் இரவு 10 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து வருகிற 19-ந்தேதி முதல் ஜனவரி 21-ந்தேதி வரையில் (புதன்கிழமை மட்டும்) அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (07108), மறுநாள் காலை 10.30 மணிக்கு சார்லபள்ளி சென்றடையும்.
* ஆந்திர மாநிலம் காக்கிநாடா டவுனில் இருந்து இன்று (திங்கட்கிழமை), டிசம்பர் 1, 8, 15, 22, 29, ஜனவரி 5, 12, 19 ஆகிய தேதிகளில் மதியம் 1 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (07109), மறுநாள் மாலை 5.30 மணிக்கு கோட்டயம் சென்றடையும். மறுமார்க்கமாக, கோட்டயத்தில் இருந்து நாளை (செவ்வாய்கிழமை), டிசம்பர் 2, 9, 16, 23, 30, ஜனவரி 6, 13, 20 ஆகிய தேதிகளில் இரவு 8.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (07110), மறுநாள் இரவு 11 மணிக்கு காக்கிநாடா டவுன் சென்றடையும்.
* ஆந்திர மாநிலம் மச்சிலிப்பட்டினத்தில் இருந்து வருகிற 21, 28 டிசம்பர் 26, ஜனவரி 2 ஆகிய தேதிகளில் மாலை 4.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (07101), மறுநாள் இரவு 10 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து வருகிற 23,30, டிசம்பர் 28, ஜனவரி 4 ஆகிய தேதிகளில் அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (07102), மறுநாள் காலை 8 மணிக்கு மச்சிலிப்பட்டினம் சென்றடையும்.
* ஆந்திர மாநிலம் மச்சிலிப்பட்டினத்தில் இருந்து டிசம்பர் 5, 12, 19, ஜனவரி 9, 16 ஆகிய தேதிகளில் காலை 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (07103), மறுநாள் இரவு 10 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து டிசம்பர் 7 ,14, 21, ஜனவரி 11, 18 ஆகிய தேதிகளில் அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (07104), மறுநாள் மதியம் 12.30 மணிக்கு மச்சிலிப்பட்டினம் சென்றடையும்.
* ஆந்திர மாநிலம் நரசாபூரில் இருந்து வருகிற 23-ந்தேதி முதல் ஜனவரி 18-ந்தேதி வரையில் (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) மாலை 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (07105), மறுநாள் இரவு 10 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து நாளை (செவ்வாய்கிழமை) முதல் ஜனவரி 20-ந்தேதி வரையில் (செவ்வாய்கிழமை மட்டும்), அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (07106), மறுநாள் காலை 7 மணிக்கு நரசாபூர் சென்றடையும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM