கனமழை காரணமாக கடலூர் விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு
சென்னை, 18 நவம்பர் (ஹி.ச.) வங்கக்கடலில் ஏற்கனவே ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி, 22ம் தேதி உருவாக உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்கு
கனமழை காரணமாக கடலூர் விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு


சென்னை, 18 நவம்பர் (ஹி.ச.)

வங்கக்கடலில் ஏற்கனவே ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி, 22ம் தேதி உருவாக உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி, தேனி மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கடலூர் மாவட்டத்திலும் நேற்று மாலை முதலே கனமழை தொடர்ந்து பெய்து வந்தது. இன்றும் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் கடலூரில் இன்று (நவ 18) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மாணவ, மாணவிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு அம்மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்துள்ளார்.

கடலூரை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்திலும் இன்று(நவ 18) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக விழுப்புரத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் அம்மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அப்துல் ரகுமான் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b