கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை - கல்வி துறை அமைச்சர் அறிவிப்பு
புதுச்சேரி, 18 நவம்பர் (ஹி.ச.) இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலை கொண்டது. இது
கனமழை காரணமாக புதுச்சேரியில்  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை - கல்வி அமைச்சர் அறிவிப்பு


புதுச்சேரி, 18 நவம்பர் (ஹி.ச.)

இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலை கொண்டது.

இது மேற்கு- வட மேற்கு திசையில் மெதுவாக நகரத் தொடங்கியுள்ளது.

இதையடுத்து தமிழகத்தில் டெல்டா மற்றும் வட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (18/11/25) அனைத்து பள்ளி, கல்லூரிகளும் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக புதுச்சேரி கல்வி அமைச்சர் ஆ. நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை (18/11/25) புதுவை மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு பள்ளி, அரசு நிதி உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b