சாட்ஜிபிடி கோ சந்தாவை ஒரு வருடத்திற்கு இலவசமாக பெறுவது எப்படி
சென்னை, 18 நவம்பர் (ஹி.ச.) சாட்ஜிபிடி-ஐ உருவாக்கிய ஓப்பன்ஏஐ (OpenAI), நிறுவனமானது சாட்ஜிபிடி கோ (ChatGPT Go) சந்தாவை 1 வருடத்திற்கு இலவசமாக வழங்குவதாக அறிவித்து இருந்தது. சாட்ஜிபிடி கோ (ChatGPT Go) என்பது பயனர்களுக்கு மேம்பட்ட ஏஐ டூல்களை (Advan
சாட்ஜிபிடி கோ சந்தாவை ஒரு வருடத்திற்கு இலவசமாக பெறுவது எப்படி


சென்னை, 18 நவம்பர் (ஹி.ச.)

சாட்ஜிபிடி-ஐ உருவாக்கிய ஓப்பன்ஏஐ (OpenAI), நிறுவனமானது சாட்ஜிபிடி கோ (ChatGPT Go) சந்தாவை 1 வருடத்திற்கு இலவசமாக வழங்குவதாக அறிவித்து இருந்தது.

சாட்ஜிபிடி கோ (ChatGPT Go) என்பது பயனர்களுக்கு மேம்பட்ட ஏஐ டூல்களை (Advanced AI tools) மலிவு விலையில் அணுகும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

ஜிபிடி-5 (GPT-5) ஆல் இயக்கப்படும் இந்த திட்டம், இந்திய மொழிகளுக்கான மேம்பட்ட ஆதரவு, 10 மடங்கு அதிக செய்தி வரம்புகள் (Message Limits), இமேஜ் உருவாக்கங்கள் (Image Generations) மற்றும் ஒரு நாளைக்கு அதிக பைல் மற்றும் இமேஜ் பதிவேற்றங்கள் (File and Image Uploads) போன்ற நன்மைகளை வழங்குகிறது. மேலும் தனிப்பயனாக்கப்பட்ட பதில்களுக்கு இது இரட்டிப்பு மெமரி உடன் வருகிறது.

இலவச சாட்ஜிபிடி கோ சந்தா புதிய மற்றும் ஏற்கனவே உள்ள சாட்ஜிபிடி ஆகிய இரண்டு வகை பயனர்களுக்கும் அணுக கிடைக்கிறது. மேலும் இந்த விளம்பர சலுகையை வெப்சைட் (Web) மற்றும் ஆண்ட்ராய்டு (Android) ஆகிய இரண்டிலிருந்தும் ரீடீம் செய்ய முடியும் என்று ஓப்பன்ஏஐ கூறுகிறது.

ஆனால் ஐபோன் (iPhone) பயனர்கள் இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். எல்லாவற்றை விட முக்கியமாக இந்த சலுகை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் என்று ஓப்பன் ஏஐ கூறுகிறது. மேலும் இது எப்போது முடிவடையும் என்கிற எந்த தேதியையும் அது பகிர்ந்து கொள்ளவில்லை.

நீங்கள் சாட்ஜிபிடி-க்கு புதியவராகவோ அல்லது ஏற்கனவே இந்த ஏஐ சாட்பாட்டின் ஃப்ரீ-டயரில் இருந்தாலோ, சாட் ஜிபிடி-யின் வெப் வெர்ஷனுக்கு செல்லவும் அல்லது உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உள்ள சாட்ஜிபிடி ஆப்பை திறக்கவும்.

வெப் பயனர்கள் ட்ரை சாட்ஜிபிடி கோ (Try ChatGPT Go) என்கிற பட்டனை கிளிக் செய்ய வேண்டும், அதே நேரத்தில் ஆண்ட்ராய்டு பயனர்கள் அப்கிரேட் டூ கோ பார் ப்ரீ (Upgrade to Go for Free) என்கிற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

ஒரு வேளை ஆண்ட்ராய்டு ஆப் இந்த சலுகையை காட்டவில்லை என்றால், ஹோம்ஸ் ஸ்க்ரீனில் தோன்றும் ட்ரை கோ

(Try Go) பில்-ஐ கிளிக் செய்யலாம் அல்லது ஆப் செட்டிங்ஸ்-ல் இந்த விருப்பத்தைக் கண்டறியலாம்.

இப்போது, முன்னதாக நீங்கள் சாட்ஜிபிடிக்காக பணம் செலுத்தியதே இல்லை என்றால், ஒரு கட்டண முறையை (Payment Method) சேர்க்கவும். பின்னர் சாட்ஜிபிடி கோ-வை இலவசமாக பெற, யுபிஐ (UPI) வழியாக பணம் செலுத்தினால் தற்காலிகமாக ரூ. 1 அல்லது உங்கள் கிரெடிட் கார்டை பயன்படுத்தி பணம் செலுத்தினால் ரூ. 2 வசூலிக்கப்படும்.

Hindusthan Samachar / JANAKI RAM