Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 18 நவம்பர் (ஹி.ச.)
வருமான வரி தாக்கலை எளிமைப்படுத்தும் வகையில் புதிய சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது.
இந்த சட்டம் அடுத்த நிதியாண்டு முதல் அமலுக்கு வரும் நிலையில் இந்த சட்டத்துக்கான விதிகள் மற்றும் வருமான வரி கணக்கு படிவங்களை அடுத்த ஆண்டு (2026) ஜனவரி மாதத்துக்குள் வெளியிடப்படும் என மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் ரவி அகர்வால் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
புதிய வருமான வரிச்சட்டத்தின் விதிகள் மற்றும் படிவங்களை வடிவமைக்கும் பணிகளில் ஈடுபட்டு இருக்கிறோம்.
ஜனவரி மாதத்துக்குள் இதை வெளியிட திட்டமிட்டு உள்ளோம்.
அதன் மூலம் வரி செலுத்துவோர் தங்கள் செயல்முறைகளை மாற்றியமைக்க போதுமான நேரம் கிடைக்கும்.
என்றார்.
Hindusthan Samachar / JANAKI RAM