Enter your Email Address to subscribe to our newsletters

தருமபுரி, 18 நவம்பர் (ஹி.ச.)
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களின் கருவில் உள்ள சிசு ஆணா?பெண்ணா? என பாலினம் கண்டறிந்து கூறுவதாக தலைமை மருத்துவர் பாலசுப்ரமணிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மறைமுகமாக கண்காணித்ததில் தற்காலிக செவிலியர் பரிமளா மீது சந்தேகம் எமுந்தது.
இதையடுத்து கடந்த ஒரு மாத சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்த போது சம்பந்தமில்லாத சில ஆண் நபர்கள் கர்ப்பிணி பெண்களுடன் ஸ்கேன் அறைக்குள் சென்று வருவதும், செவிலியர் பரிமளா அவர்களிடம் பணம் பெறுவது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவர் பாலசுப்ரமணியம் இது குறித்து பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார், இதனை தெரிந்து கொண்ட செவிலியர் பரிமளா தப்பி ஓடி தலைமறைவானார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பாலக்கோடு போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்ததில் ஆந்திராமாநிலத்தை சேர்ந்த கிளாராமேனகா தேவி (25) பிரதீப் (26) மற்றும் அனுமந்தபுரம் கிராமத்தை சேர்ந்த வடிவேல் (41) இவருடன் பெயர் தெரியாத நபர் உட்பட 5 பேர் இதில் இடைத்தரகர்களாக செயல்பட்டது தெரிய வந்தது.
இதனையடுத்து ஆந்திரா மாநிலம் விரைந்து சென்ற போலீசார் சித்தூர் பகுதியில் பதுங்கி இருந்த இடைத்தரகர்கள் கிளராமேனகாதேவி மற்றும் பிரதீபை கைது செய்து பாலகோடு காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து தருமபுரி சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடிய செவிலியர் உள்ளிட்ட 3 பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.
மேலும் செவிலியர் பரிமளா சுகாதாரம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் சாந்தியிடம் பணி செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்களின் நம்பிக்கையாக உள்ள அரசு மருத்துவமணையில் செவிலியரே பணத்திற்காக சிசுவின் பாலினம் கண்டறிந்து தெரிவித்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN