'வாரணாசி' டைட்டில் வெளியிட்டு விழா -  உணர்ச்சிவசப்பட்டு பேசிய ராஜமெளலி!
ஹைதராபாத், 19 நவம்பர் (ஹி.ச.) இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி தந்தையும் மூத்த திரைக்கதை ஆசிரியருமான விஜயேந்திர பிரசாத்தான் அவர் ''வாரணாசி'' என்ற படத்திற்கும் கதை எழுதியுள்ளார். படத்தின் டைட்டில் அறிமுக விழா ஐதராபாத்தில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.
வாரணாசி


ஹைதராபாத், 19 நவம்பர் (ஹி.ச.)

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி தந்தையும் மூத்த திரைக்கதை ஆசிரியருமான விஜயேந்திர பிரசாத்தான் அவர் 'வாரணாசி' என்ற படத்திற்கும் கதை எழுதியுள்ளார்.

படத்தின் டைட்டில் அறிமுக விழா ஐதராபாத்தில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.

இப்படத்தில், ருத்ரா எனும் கதாபாத்திரத்தில் மிகப்பெரிய ஸ்டார்களில் ஒருவரான மகேஷ்பாபு நடிக்கிறார்.

ராமாயணக் காலம் தொடங்கி இன்றைய நவீன காலகட்டத்துடன் இணைத்து 'வாரணாசி' திரைப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் பேசிய

ராஜ மெளலியின் தந்தை விஜயேந்திர பிரசாத்,

இந்தப் படம் ஒரு தெய்வீக முடிவு.

ராஜமவுலியின் இதயத்தில் இருந்து அனுமன் இப்படத்தை இயக்குவதற்கு வழி நடத்துகிறார்.என்றார்.

இதனைத் தொடர்ந்து படத்தின் டைட்டில் டீஸரின் வெளியீட்டின் போது ஏற்பட்ட தொழில் நுட்பக் கோளாரால் சிறிது நேரம் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.

இதனால் கோபமடைந்த ராஜமெளலி,

பேசும் போது,

தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை அனுமன் இப்படித்தான் நிகழ்ச்சியை நடத்துவாரா?

அதில், எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை

என் தந்தை வந்து எனக்கு பின்னால் அனுமன் இருந்து எனக்கு அனுமன் எனக்கு வழிகாட்டுவதாக கூறினார்.

இந்த தவறுகள் நடந்தவுடன் எனக்கு அவர் மீது கோபம் வந்தது.

அவர் இப்படித்தான் எனக்கு உதவுவாரா? என்று பேசினார்.

ராஜமெளலியின் இந்த பேச்சுக்கு ,பலர் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இதற்கிடையே ராஜமௌலி மீது ராஷ்ட்ரிய வானர சேனா அமைப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.

படத்தின் ஆரம்பமே இப்படியா?டைட்டில் வெளியாகும் போதே இவ்வளவு சர்ச்சையா? என்று திரையுலகினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Hindusthan Samachar / Durai.J