Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு , 19 நவம்பர் (ஹி.ச.)
செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (நவ 19) தொடங்கிவைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது,
விளையாட்டிற்கு ரசிகனாக இருந்தவர் கலைஞர். முத்தமிழறிஞர் கலைஞருக்கு விளையாட்டின் மீது இருந்த காரணத்தினால் தான், Kalaignar Sports Kit திட்டத்திற்கு கலைஞரின் பெயர் வைக்கப்பட்டது. கலைஞர் அரசியல் தலைவராகவும், மிகப் பெரிய விளையாட்டிற்கு ரசிகனாகவும் இருந்தவர்.
திறனுள்ள வீரர்களை கண்டுபிடித்து அவர்களை சாதனை படைக்க வைக்கும் அரசுதான் நமது திராவிட மாடல் அரசு. விளையாட்டுத்துறையில் சாதனை படைக்கின்ற வீரர்களுக்கு மூன்று சதவீத இட ஒதுக்கீட்டில், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் அரசு வேலை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை பல்வேறு சாதனைகள் படைத்த 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு 12,500 கிராமங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. விளையாட்டுத்துறைக்கு பல்வேறு திட்டங்களை திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வருகிகிறது.
விளையாட்டுத்துறையில் தமிழர்கள் சாதித்து வருகின்றனர். விளையாட்டுத்துறைக்கு பல்வேறு திட்டங்களை திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வருகிறது. விளையாட்டு வீரர்களை தமிழ்நாடு அரசு ஊக்குவித்து வருகிறது. விளையாட்டுத்துறையில் இந்தியாவின் த தலைநகராக தமிழ்நாட்டை மாற்றுவோம்.
தமிழக அரசின் தொடர் முயற்சியால் ஏராளமான மாணவர்கள் உலகம் முழுவதும் சாதனை படைக்கின்றனர். எல்லோரிடமும் ஒற்றுமை, சகோதரத்துவம் வளர விளையாட்டுத் திறன் மிகவும் முக்கியம்.
விளையாட்டை பொறுத்தவரை மதம், சாதி வேறுபாடு கிடையாது. அதுதான் விளையாட்டின் மிகப்பெரிய சக்தி.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b