செல்லப்பிராணிகள் சிறப்பு முகாமில் 3,319 உரிமம் வழங்கப்பட்டுள்ளது - சென்னை மாநகராட்சி தகவல்
சென்னை, 19 நவம்பர் (ஹி.ச.) சென்னை மாநகராட்சியில் செல்ல பிராணிகள் பதிவை எளிதாக்குவதற்கான சிறப்பு முகாமை மாநகராட்சி அறிவித்திருந்தது. அதன்படி சென்னையில் திரு.வி.க.நகர், புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, நுங்கம்பாக்கம், கண்ணம்மாப்பேட்டை, மீனம்பாக்
சிறப்பு முகாமில் 3319 செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது - சென்னை மாநகராட்சி தகவல்


சென்னை, 19 நவம்பர் (ஹி.ச.)

சென்னை மாநகராட்சியில் செல்ல பிராணிகள் பதிவை எளிதாக்குவதற்கான சிறப்பு முகாமை மாநகராட்சி அறிவித்திருந்தது.

அதன்படி சென்னையில் திரு.வி.க.நகர், புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, நுங்கம்பாக்கம், கண்ணம்மாப்பேட்டை, மீனம்பாக்கம் உள்ளிட்ட 7 இடங்களில், மூன்று ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடைபெறும் என ஏற்கனவே மாநகராட்சி அறிவித்திருந்தது.

அதன்படி,காலை 8:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடைபெறும். முகாமில், மைக்ரோசிப் பொருத்துவது, தடுப்பூசி போடுவது, அத்துடன் இணையதளத்தில் பதிவு செய்வது குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது,

அதன்படி கடந்த 9 தேதி ஞாயிற்று கிழமையில் 767 நாய்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது.

கடந்த 16 தேதி செல்லப் பிராணிகளுக்காக நடைபெற்ற சிறப்பு முகாமில் 2552 செல்லப் பிராணிகளுக்கு வெறி நாய்க்கடி நோய்த் தடுப்பூசி செலுத்தி, மைக்ரோசிப் பொருத்தி, செல்லப் பிராணிகளின் உரிமையாளர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன்படி கடந்த இரண்டு வாரங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 3319 செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் இதுவரை 16 ஆயிரம் செல்லப் பிராணிகளுக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

53 ஆயிரம் உரிமையாளர்கள் இதுவரை ஆன் லைனில் உரிமம் கோரி பதிவு செய்துள்ளனர் என மாநகராட்சி சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வரும் 23 தேதி உரிமம் பெறுவது கடைசி நாளாகும், 24 தேதிக்கு பிறகு உரிமம் இல்லாவிட்டால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b