கனமழை பெய்து வரும் நிலையில் குற்றாலம் மெயின் அருவியில் 2-வது நாளாக குளிக்க தடை
தென்காசி, 19 நவம்பர் (ஹி.ச.) தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழை
கனமழை பெய்து வரும் நிலையில் குற்றாலம் மெயின் அருவியில் 2-வது நாளாக குளிக்க தடை


தென்காசி, 19 நவம்பர் (ஹி.ச.)

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

கார்த்திகை மாதம் பிறந்துள்ள நிலையில் சபரிமலை கோவிலுக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள், குற்றாலம் வந்து அருவிகளில் நீராடி விட்டு செல்கின்றனர். இதனால் குற்றாலம் அருவிகளில் கூட்டம் நிரம்பி காணப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் குற்றாலம் அருவிகளுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் அருவிக்கு வரும் நீரின் அளவை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், கனமழையை முன்னிட்டு, குற்றாலம் மெயின் அருவியில் 2-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM