Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 19 நவம்பர் (ஹி.ச.)
கோவை கொடிசியா வளாகத்தில் தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு சார்பில் நடைபெறவுள்ள தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை இந்திய பிரதமர் மோடி இன்று (நவ 19) தொடங்கி வைக்கிறார்.இதற்காக ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து விமானம் மூலம் இன்று
(நவ 19) கோவை விமான நிலையத்திற்கு மோடி வருகிறார். கோவை வருகை தரரும் பிரதமர் மோடிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்பு அளிக்கின்றனர்.
இந்த பயணத்தின் போது, சாதனை விவசாயிகளுக்கு விருது வழங்குவதுடன், பி.எம். கிசான் திட்டத்தின் தவணையையும் பிரதமர் விடுவிக்கிறார். பி.எம். கிசான் திட்டத்தில் 9 கோடி விவசாயிகளுக்கு 21ம் தவணையை விடுக்க உள்ளார். பிரதமர் மோடி கோவை வருகையை முன்னிட்டு உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கோவை விமான நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் சிங்காநல்லூர், எஸ்.ஐ.எச்.எஸ். காலனி, நேரு நகர், காளப்பட்டி, கொடிசியா உள் அரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடியின் கோவை வருகையொட்டி டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோவை கொடிசியா, பீளமேடு சுற்றுவட்டாரப் பகுதிகளில உள்ள டாஸ்மாக் கடைகளை இன்று (நவ 19) காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி 15 டாஸ்மாக் கடைகள், 5 பார்கள், 1 18
(FL 2) உயர்தர பார்களை மூட கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் உத்தரவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b