Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 19 நவம்பர் (ஹி.ச.)
கோவை மாவட்டம், இருகூர் பகுதியில் இயங்கி வந்த பாலிஸ்டர் பஞ்சு குடோனில் இன்று மாலை ஏற்பட்ட தீவிபத்து அப்பகுதியை அச்சத்தில் ஆழ்த்தியது. சுமார் மாலை 5.30 மணி அளவில் குடோனின் உள் இருந்து திடீரென புகை எழுந்ததை அருகில் இருந்த தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கவனித்தனர்.
சில நிமிடங்களிலேயே தீ மளமளவென பரவி, குடோனின் பெரிய பகுதியை சூழ்ந்தது.
தீ பரவல் அதிகரித்ததை பார்த்த அப்பகுதி மக்கள் தாங்களே தீயை கட்டுப்படுத்த முயன்றனர். எனினும் தீ வேகமாக பரவியதால் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலினைப் பெற்ற தீயணைப்பு நிலையத்தில் இருந்து இரண்டு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
தீ மிகுந்த அளவில் இருந்ததால், தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரத்துக்கும் மேலாக கடுமையாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
குடோனில் இருந்த பஞ்சுப் பொருட்கள் காரணமாக தீ விரைவாகப் பரவி இருந்தது என்பதும், அவற்றை முழுமையாக அணைக்க அதிக நேரம் பிடித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்திய விபத்தில் பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது உள்ளது.
எனினும் உயிர்ச்சேதம் ஏற்படாதது எதுவும் ஏற்படவில்லை, தீயின் காரணம் குறித்து தீயணைப்பு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / V.srini Vasan