வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து அரசாணை வெளியீடு
சென்னை, 19 நவம்பர் (ஹி.ச.) கடந்த ஜூலை 8ம் தேதி வாக்காளர் பட்டியல்களை தயாரித்தல் மற்றும் திருத்துதல் பணிகளில் ஈடுபட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் (பிஎல்ஓ) மற்றும் வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்கள் ஆகியோரின் ஆண்டு ஊதியத்தை உயர்த்தி தேர்தல்
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு  குறித்து அரசாணை வெளியீடு


சென்னை, 19 நவம்பர் (ஹி.ச.)

கடந்த ஜூலை 8ம் தேதி வாக்காளர் பட்டியல்களை தயாரித்தல் மற்றும் திருத்துதல் பணிகளில் ஈடுபட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் (பிஎல்ஓ) மற்றும் வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்கள் ஆகியோரின் ஆண்டு ஊதியத்தை உயர்த்தி தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

இதன்படி, 2015ம் ஆண்டு பிஎல்ஓக்களுக்கு ரூ.6 ஆயிரம் ஆண்டு ஊதியம் வழங்கப்பட்ட நிலையில், இது ரூ.12 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டது. இதே போல வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்களுக்கான ஊதியம் ரூ12 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டது.

மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அல்லது வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்வதற்கான சிறப்பு ஊக்கத்தொகை ரூ.1,000ல் இருந்து ரூ.2 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டது.

தற்போது இந்த ஊதிய உயர்வுக்கான தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஊதிய உயர்வு 2025-26ம் நிதியாண்டிலிருந்து வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b