சாலையில் ஓட ஓட விரட்டி இளைஞர் படுகொலை - பிரபல ரவுடி வெள்ளைக்காளி தரப்பை சேர்ந்த இருவர் கைது
மதுரை, 19 நவம்பர் (ஹி.ச.) மதுரை மாநகர் எம் கே படத்தைச் சேர்ந்த முத்துமணி போஸ் என்ற இளைஞர் இரவு சாலையில் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் பிரபல ரவுடி வெள்ளைக்காளியின் ஆதரவாளர்களா
Vellai Kali Team


மதுரை, 19 நவம்பர் (ஹி.ச.)

மதுரை மாநகர் எம் கே படத்தைச் சேர்ந்த முத்துமணி போஸ் என்ற இளைஞர் இரவு சாலையில் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் பிரபல ரவுடி வெள்ளைக்காளியின் ஆதரவாளர்களான ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்த சரவணக்குமார் (19) , கார்த்திகேயன் (எ) மெட்டுக்கார்த்தி (20) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

திண்டுக்கல்லில் ஜூலை 11 ஆம் தேதி பிரபல ரவுடி வெள்ளை காளி தரப்பைச் சார்ந்த சிவமணி என்பவரை கொலை செய்த வழக்கில் முத்துமணி போஸின் சகோதரர் முனியசாமி ஈடுபட்ட நிலையில் அந்த கொலை சம்பவத்திற்கு பழி வாங்கும் நோக்கில் முத்துமணி போஸை இருவரும் தலையில் கல்லை போட்டு ஓட ஓட விரட்டி கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN