கோவையில் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
கோவை, 19 நவம்பர் (ஹி.ச.) ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து இன்று (நவ 19 ) மதியம் தனி விமானம் மூலம் பிரதமர் மோடி கோவை விமான நிலையம் வந்தார். பிரதமரை எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், ஆளுநர் ரவி, அமைச்சர் சாமிநாதன், கோவை மாவட்ட ஆட
கோவையில் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்


கோவை, 19 நவம்பர் (ஹி.ச.)

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து இன்று (நவ 19 ) மதியம் தனி விமானம் மூலம் பிரதமர் மோடி கோவை விமான நிலையம் வந்தார்.

பிரதமரை எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன், ஆளுநர் ரவி, அமைச்சர் சாமிநாதன், கோவை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

விமான நிலையத்தில் இருந்து கொடிசியா வளாகத்திற்கு காரில் வந்த பிரதமர் மோடிக்கு சாலையின் இருபுறமும், பாரம்பரிய கலைநிகழ்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் பிரதமர் மோடி தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில், கோவை கொடிசியா வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இயற்கை விவசாயிகள் அமைத்த அரங்குகள் மற்றும் கண்காட்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார்.

இவ்விழாவிற்கு கவர்னர் ரவி தலைமை வகித்தார்.

தொடர்ந்து,

பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி' திட்டத்தில், 9 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில்,

21-வது தவணையாக, ரூ.18 ஆயிரம் கோடி நிதியை பிரதமர் மோடி விடுவிக்கிறார்.

Hindusthan Samachar / vidya.b