Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 19 நவம்பர் (ஹி.ச.)
விவசாயத்தை வலியுறுத்தி கோவையில் இன்று நடைபெறும் மாநாட்டிற்கு வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்று பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் இயற்கை விவசாயத்தை வலியுறுத்தி கோவையில் இன்று நடைபெறும் மாநாட்டைத் துவக்கி வைக்க தமிழகம் வருகைபுரியும் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடியை தமிழக மக்கள் சார்பாக வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
அதிலும், நாடுமுழுவதும் உள்ள 9 கோடி விவசாயிகளுக்குப் பலனளிக்கும் வகையில் பிரதமரின் விவசாயிகள் கௌரவிப்பு நிதி உதவித் திட்டத்தின் (PM-KISAN) 21-ஆவது தவணையில் ரூ.18,000 கோடியைத் தமிழக மண்ணில் வைத்து தமது பொற்கரங்களால் விடுவிக்கவிருப்பது மகிழ்ச்சியைப் பல மடங்காக்குகிறது.
இவ்வாறு ஒட்டுமொத்த உழவர் பெருமக்களின் நலனை மேம்படுத்த தமிழகத்திற்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை மீண்டுமொருமுறை அன்புடன் வரவேற்கிறோம்.
என்று அவர் பிரதமரை வரவேற்க அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ